கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
கல்லூரி செயலாளர் கண்ணன் பேசிய காட்சி

கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கமணி, சரவணகுமார், முன்னாள் மாணவர் மகேந்திரன் மற்றும் முதல்வர் முனைவர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயற்பியல் துறை தலைவர் பிரியங்கா வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி செயலாளர் கண்ணன் பேசுகையில், கல்லூரியை பற்றியும் மாணவர்களின் வளர்ச்சியில் கல்லூரியின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்.
கல்லூரியின் முன்னாள் மாணவர் மகேந்திரன் பேசுகையில் கல்லூரியின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்டார்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ் பேசுகையில் கல்லூரியின் சிறப்பம்சம் குறித்தும் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளை பற்றியும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர் முனைவர் செல்வ லட்சுமி கல்லூரியின் இணைப் பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்ட புறச் செயல்கள் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி பேராசிரியர் கற்குவேல் ராஜ் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துறை தலைவர்கள் விஜய கோபாலன், செல்வ லட்சுமி, ரமேஷ், பிரியங்கா, செல்லதுரை, மகேஸ்வரி சபிதா சண்முகப்பிரியா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







