‘எல் நினோ’ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பகுதியில், கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமடைவதை குறிக்கும் ஒரு உலகளாவிய வானிலை நிகழ்வு ஆகும். அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணிப்பின்படி, ‘கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயர்வதற்கு 63 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த ‘எல் நினோ’ மிகவும் வலுவானது என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 1951-ம் ஆண்டுக்கு […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு
தமிழகம் முழுவதும் கலை கல்லூரிகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10 நாட்கள் நடைபெறும் சிகரம் தொடு-2026 வழிகாட்டுதல் கருத்தரங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது, 10 நாள் கருத்தரங்கில் ஒவ்வொரு நாளும் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,.வழக்கறிஞர் ஜெயஸ்ரீ.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயலாளர் சாந்தி,.சமூக நலத்துறை பொன்மாரி,.பணி நிறைவு […]
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. 1998-ம் ஆண்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா சார்பில் இந்த கோவிலின் மேற்கூரை மற்றும் துவார பாலகர் சிலைகளில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக அப்போது 33 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு துவார பாலகர் சிலைகள் மற்றும் பிரதான கதவு நிலையை அழகுப்படுத்துவதற்காக அவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் […]
கோவில் வளாகங்களில் பூஜை பொருட்கள் விற்பனை கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்; அமைச்சர் ரமேஷ்
கோவில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜைப் பொருள்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். பூஜைப் பொருள்களின் விலைப் பட்டியலை பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும். […]
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார்.ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு தமிழக பாஜகதலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார். அங்கு அவர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய வளர்ச்சி திட்டஙகள் தொடர்பான புத்தகம் ஒன்றை வழங்கினார்.இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் போட்டோக்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;- இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், […]
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டார். இரண்டிலும் வென்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தின் முதல்வராக சட்டப்படி பதவியேற்றார் இந் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக தவெக தலைவர் விஜய் வென்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறி உள்ளதாவது; 18 வயதுக்கு […]
தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அவரது உத்தரவுபடி தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் […]
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து, தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த நிலையில், சி. விஜயபாஸ்கர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர், அ.தி.மு.க.வில் இருந்து பதவி விலகிய 5-வது எம்.எல்.ஏ. ஆவார். இதனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 47-ல் இருந்து 42 […]
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.50,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமென கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு விவாசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.35 […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அருண்ராஜ் (32), டிரைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 30.4.2015 அன்று அருண்ராஜ், வீரமுத்து அம்மாள் (65) என்ற பெண்ணின் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது கிரிக்கெட் பந்து வீரமுத்து அம்மாள் வீட்டிற்குள் விழுந்ததால், அதை எடுக்கச் சென்ற அருண்ராஜை அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்ராஜ், வீரமுத்து அம்மாளைசாதிப் பெயரைச் சொல்லித் […]







