கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு

தமிழகம் முழுவதும் கலை கல்லூரிகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10 நாட்கள் நடைபெறும் சிகரம் தொடு-2026 வழிகாட்டுதல் கருத்தரங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது,

10 நாள் கருத்தரங்கில் ஒவ்வொரு நாளும் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா,.வழக்கறிஞர் ஜெயஸ்ரீ.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயலாளர் சாந்தி,.சமூக நலத்துறை பொன்மாரி,.பணி நிறைவு பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரன்,.கார்ப்பரேட் பயிற்றுநர்கள் ஜெயராமன்,,குமரேசன்,,கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா,,காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன்,.பென்டகன் கார்மெண்ட்ஸ் நிறுவனர் ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வழிகாட்ட உள்ளனர்.
10வது நாளில் மாணவர்களை திருநெல்வேலி அறிவியல் மையம்,,அருங்காட்சியம்,,ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
கருத்தரங்கின் இரண்டாம் நாளான இன்று காலை நடந்த நிகழ்விற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்,.கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
வழக்கறிஞர் ஜெயஸ்ரீ மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பிலும் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயலாளர் சாந்தி, ஆரோக்கிய நலனில் மாணவர்கள், வானவியல் குறித்தும் பேசினார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்க துணை தலைவர் முத்து முருகன்,கம்பன் கழக செயலாளர் சரவண செல்வம்,கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், தங்கமணி, சரவணகுமார், ராஜ்மோகன், பேராசிரியர்கள் செல்வலட்சுமி, விஜய கோபாலன், சபிதா சண்முகப்பிரியா,ஆனந்த்,பிரேமலதா,ஸ்ரீராமஜெயா,ஸ்ருதி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் பிரியங்கா அனைவரையும் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் சரவணக்குமாரி நன்றி கூறினார்







