ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார்.
ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு தமிழக பாஜகதலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார். அங்கு அவர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

சந்திப்பின் போது பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் முக்கிய வளர்ச்சி திட்டஙகள் தொடர்பான புத்தகம் ஒன்றை வழங்கினார்.
இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் போட்டோக்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;-
இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதா சாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்ம விபூஷன் ரஜினிகாந்தை பாஜ தேசிய செயலாளரும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமான அர்விந்த் மேனன் உடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

அப்போது, பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்ற பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.







