தமிழகத்தில் வரும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்து 15-ந் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 18-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி […]
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணியின்வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வருகிற 17-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான சுற்றுப்பயண அட்டவணையை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கமல்ஹாசன், தவெக தலைவரும், நடிகருமான […]
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தூண்டுவது போதைப்பொருளை எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்கு கடத்துவது போன்ற செயல்களில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும், அவர்கள் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இணையவழியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே பயங்கரவாத பிரசாரத்தையும், தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, இணையவழியாகவும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான கண்காணிப்பை இந்திய உளவு அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், உத்தரகாண்ட் […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் பனையேறும் தொழிலாளி மணிகண்டன் என்பவரை காவல் உதவியாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் பெருகி வருகின்றன. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக ஆலங்குளத்திற்கு சென்றிருந்த சீமான் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு கூடி இருந்தவர்கள் மத்தியில் வேனில் இருந்தபடியே பேசினார், […]
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்…. தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களை… தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விஜய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். . அவர் கன்னியாகுமரி அருகே உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 72 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் தொடக்கமாக ஆங்கிலத் துறை பேராசிரியர் கற்குவேல் ராஜ் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர் செல்வராஜ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் விஜயகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். Delphi TVS, LETNEX, Pecilglitz மற்றும் Magic Bus India Foundation ஆகிய 4 நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் கல்லூரிக்கு […]
தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி … விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வேனில் ரோடு ஷோவாக வந்தார். மதுரையில் இருந்து காரைக்குடிக்கு 1.30 மணி நேரத்தில் வந்துவிடலாம் என்ற போதிலும், வழி நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியதால் விஜய் வந்து சேர தாமதமானது. 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை மட்டுமே காரைக்குடி கண்ணதாசன் நகர் […]
சி.பி.எஸ்.இ. நிர்வாகம், கல்வி முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்தவரிசையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத்தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மும்மொழிக் கொள்கையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மாணவர்கள் படிக்கும் […]
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரசாரம்செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை […]







