துப்பாக்கியால் சுடப்பட்ட மணிகண்டன் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் பனையேறும் தொழிலாளி மணிகண்டன் என்பவரை காவல் உதவியாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் பெருகி வருகின்றன.

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக ஆலங்குளத்திற்கு சென்றிருந்த சீமான் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு கூடி இருந்தவர்கள் மத்தியில் வேனில் இருந்தபடியே பேசினார்,
முன்னதாக அங்கு மணிகண்டனின் பெற்றோர்ர் பெருமாள் சேட் -செல்லம்மாள், மணிகண்டனின் மனைவி பொன்மணி, மகன்கள் ஸ்ரேயாஸ், அத்விக் , அண்ணன் சிவன் பொன்ராஜ் ஆகியோரை சந்தித்து சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது மணிகண்டன் பெற்றோர் கண்ணீர் மல்க சீமானிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சீமான் மணிகண்டனின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.







