கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்; 72 மாணவ, மாணவிகள் பணி நியமன ஆணை பெற்றனர்

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 72 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ஆங்கிலத் துறை பேராசிரியர் கற்குவேல் ராஜ் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர் செல்வராஜ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் விஜயகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Delphi TVS, LETNEX, Pecilglitz மற்றும் Magic Bus India Foundation ஆகிய 4 நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் கல்லூரிக்கு வருகை தந்து, மாணவர்களுக்கு தனித்தனியாக எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளை நடத்தினர்.
தேர்வில் தகுதி பெற்ற 72 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
முடிவில் , வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ஸ்ருதி நன்றி கூறினார்.








