விஜய் போட்டியிடும் தொகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணியின்வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வருகிற 17-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான சுற்றுப்பயண அட்டவணையை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கமல்ஹாசன், தவெக தலைவரும், நடிகருமான விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு
தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-…

17-ந்தேதி
சென்னை கிழக்கு – துறைமுகம்
சென்னை வடக்கு – பெரம்பூர்
சென்னை கிழக்கு – கொளத்தூர், வில்லிவாக்கம்.
18-ந்தேதி
சென்னை தென்மேற்கு – தியாகராயர் நகர், மயிலாப்பூர்,
சென்னை மேற்கு – சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
சென்னை தெற்கு – வேளச்சேரி
19-ந்தேதி
திருப்பூர் வடக்கு – அவினாசி
கோவை மாநகர் – கோவை தெற்கு.
20-ந்தேதி
திருச்சி தெற்கு – திருச்சி கிழக்கு
திருச்சி மத்திய – திருவரங்கம், லால்குடி







