இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி கோவில்பட்டியில் பெண்ணுரிமை காப்போம் – பாலின சமத்துவம் பெறுவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் நடந்த கருத்தரங்கத்துக்கு மாதர் தேசிய சம்மேளனம் நகரச் செயலாளர் விஜயலட்சுமி, நகரத் தலைவர் கோமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநிலச் செயலாளர் கண்ணகி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் முனீஸ்வரி என்ற சாந்தி, முத்துப் பிருந்தா, […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரத்து 235) தாண்டி விட்டது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு உயர்மட்ட அதிகாரிகள் கூறியதாவது:- “சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் […]
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் வைத்து தூத்துக்குடி கே.வி.கே சாமி நகரைச் சேர்ந்த ஹரிகுமார் 25/18 என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மாமனாரான தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 58/26 என்பவர் மற்றும் அவரது உறவினரான சத்தியநாராயணன் 34/26 ஆகியோர் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்தனர். இந்த சமபவம் கடந்த 2018ம் ஆண்டு நடந்டஹ்து,. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை […]
கோவில்பட்டி நகராட்சிக்கு இந்த ஆண்டு பலமடங்கு சொத்து வரி உயர்த்தியது போல் தெரிகிறது. அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாமல் இது தொடர்பான வரி உயர்வு நோட்டீசை கண்டு , பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், கட்டிடம் மற்றும் குடியிருப்புகளின் கடந்த 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி 500 ரூபாய்க்கு குறைவாக செலுத்திய நிலையில், இந்த வருடம் அதிரடியாக , சொத்து வரி 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விதிக்கப்பட்டிருப்பதால் கோவில்பட்டி நகராட்சி பகுதி […]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருப்பதாவது:- முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்கும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து, ரூ.3.55 கோடி பணம், இதற்காகச் செலவிட்டுள்ளதாக, திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறது. சுமார் 60 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு, தலா 20 பேர் பயணம் செய்யும் இரண்டு […]
கோவில்பட்டியில் அமமுக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பூலோகப்பாண்டியன் தலைமை தாங்கினார்.. நகரச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். வீதி வீதியாக, வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள தோணுகால் கிராமம், மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிலோமீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட ஓர் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இந்த ஓடுதளம், கோவைச் சேர்ந்த லட்சுமி ஆலை நிர்வாகத்தினர் தங்களது செஸ்னா வகை சிறிய ரக விமானத்தை பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், சிலர் இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி வந்தனர். 63 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஓடுதளம் நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் ஆகிய இரு கிராமங்களை இணைக்கும் […]
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பிரபல எண்ணெய் மில் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள டயபர் தயாரிப்பு ஆலையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஏவிஎம் மணியின் மகன் சங்கர் மாரிமுத்துவிற்கு சொந்தமான கமலா ஹெல்த் கேர் நிறுவனத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தும் சுகாதாரப் பொருட்களான டயபர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று ஆலையின் வெளியே இருந்த […]
கோவில்பட்டி அருகே பசுவந்தனை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லக்கமாள் தேவி கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, காட்டுப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்து அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படும் கரிமருந்துகள் மற்றும் பட்டாசு தயார் செய்யும் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் இருந்த சுமார் 300 கிலோ கரி மருந்து , 200 கிலோ கரித்தூள் , 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கோவில்பட்டியை சேர்ந்தவ அசோக் என்ற அய்யாதுரை (வயது 27), வேல்முருகன் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்,’ இதே போல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்கில் தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கதுரை என்ற தங்கையா (22) ஆகியோர் கைத் செய்யப்பட்டனர், கைதான இவர்கள் 5 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு […]







