தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் 5 பேர் சிறையில் அடைப்பு
மாதிரிப்படம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கோவில்பட்டியை சேர்ந்தவ அசோக் என்ற அய்யாதுரை (வயது 27), வேல்முருகன் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்,’
இதே போல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்கில் தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கதுரை என்ற தங்கையா (22) ஆகியோர் கைத் செய்யப்பட்டனர்,

கைதான இவர்கள் 5 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர்
.அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி மதன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மேற்படி 5 போரையும் சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.








