• March 9, 2026

கோவில்பட்டி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை, சிகிச்சை முகாம்

 கோவில்பட்டி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை, சிகிச்சை முகாம்

 கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடுகல்லூரியின் வைரவிழா மற்றும் சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக  தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து  இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தின.

இம்முகாமை கல்லூரிச் செயலர்  மகேந்திரன்  தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர்  மூ.சுப்புலட்சுமி, சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர்  மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கண் மருத்துவர் ஆபா வி. ராஜ்  தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொது மக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இம் முகாமில் 120 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 21 பேருக்கு முகாமின் மறுநாள் கண் புரை அறுவை சிகிச்சை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி சமூகப் பொறுப்பு  திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவண செல்வக்குமார், சிவராமசுப்பு, மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *