கோவில்பட்டியில் 26 பெண்களுக்கு ‘மிளிரும் நட்சத்திரம்’ விருது
கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா எட்டயபுரம் ரோட்டில் உள்ள எழுத்தாளர் கி.ரா.நினைவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துச்சாமி தலைமை தாங்கினார்.. தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியர் நம்சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

கோவில்பட்டி டி.எஸ்.பி., ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவத் துறை, கல்வித்துறை, காவல் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் 26 பெண்களுக்கு ‘மிளிரும் நட்சத்திரம்’ விருது வழங்கி, பாராட்டிப் பேசினார். அதன் பின்னர், மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது.

தொடர்ந்து, பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் தாயா? தந்தையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. தந்தையே என்ற தலைப்பில் முருக சரஸ்வதி, பேராசிரியர் சிவசங்கரி, தாயே என்ற தலைப்பில் ஆசிரியர்கள் ஜெயதேவி, ராதா ஆகியோர் பேசினர். நடுவராக ஆசிரியர் நம்சீனிவாசன் செயல்பட்டார்.







