கோவில்பட்டியில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி



உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி கிளப், திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை, கே.ஆர் கல்வி குழுமம் இணைந்து கோவில்பட்டியில் இன்று (சனிக்கிழமை )கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் தலைமையில் கோவில்பட்டி ரோட்டரி தலைவர்ராஜ்குமார்,திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பேரணி நடைபெற்றது.
கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள்பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன்கொடி அசைத்து தொடக்கிவைத்தார்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து பேரணி புறப்பட்டு மெயின்ரோடு ஆர். சி. மேல்நிலை பள்ளியில் நிறைவு பெற்ற பேரணியில் பொன்னுஸ்நேச்சரல்ஸ் பொன்னுசாமி,ரிஜெண்ட் டெக்ஸ் ஹரிபாலன்,டாக்டர்கள் முகைதீன் அப்துல் காதர், ஹரிணி, சுகன்யா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், பொதுமக்கள்பேரணியில் கலந்துகொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் பழனி குமார் நன்றி கூறினார்.







