கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு (ஜிவிஎன்) கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் முனைவர் ப.மகேந்திரன் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி மற்றும் சுயநிதிப்பாடப்பிரிவுகள் இயக்குநர் (பொ) பா.மகேஸ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளரும் வேதியியல் துறை இணைப்பேராசிரியையும் ஆன வே.கோமதி சங்கரேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள், கல்லூரியின் சிறப்புகளைப் பற்றியும், உயர்ந்த கல்வித் தரத்தினைப் பற்றியும், மாணவர்களின் முன்னேற்றத்தில் பேராசிரியர்களின் பங்களிப்பினைப் பற்றியும் பாராட்டி […]
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம், திருச்செந்தூர் ஜே.சி.ஐ சார்பில் திருச்செந்தூர் சொர்ணம் மஹாலில் புத்தக திருவிழாவின் தொடக்க விழா நடந்தது. புத்தகத் திருவிழாவில் கலை,இலக்கியம்,வாழ்க்கை வரலாறு,நாவல்,அறிவியல்,மருத்துவம்,போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இன்று மார்ச் 14 ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக […]
கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.4,48,500
கோவில்பட்டி அருகே கழுகுமலை மேல பஜார் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நிலப் பத்திரப்பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையில், இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தின் அனைத்துக் கதவுகளையும் மூடிய போலீசார், […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் உடனடியாக பிடிபட வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்துசி.த.செல்லப்பாண்டியன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது: – 12ம் வகுப்பு […]
கோவில்பட்டி இனாம்மணியாச்சியைச் சேர்ந்த பி.சுப்புலெட்சுமி மற்றும் அவரது குடும்பம் வசித்து வந்த வீடு மழையினால் பாதிக்கப்பட்டு வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், புது வீடு கட்டுவதற்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். அக்கோரிக்கையை ஏற்று, சுப்புலெட்சுமி குடும்பத்திற்கு அரசு புதிதாகக் கட்டிக்கொடுத்திருக்கும் கலைஞர் இல்லத்தை கனிமொழி எம். பி.திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் சார்பில் கல்லூரி கூட்டரங்கில் சர்வதேச ரோட்ராக்ட் தின விழா நடந்தது. சர்வதேச ரோட்டரியில் இளைஞர்களின் பங்களிப்பினை ஊக்கப்படுத்திட […]
கடந்த பிப்ரவரி 24 அன்று கட்சி கொடியை அறிமுகம் செய்த சசிகலா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்தார். இந்தநிலையில் இன்று( மார்ச் 13) சசிகலா கட்சியின் பெயரை அறிவித்தார். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் (அ.இ.பு.த.ம.மு.க) என்ற தனது கட்சி பெயரை சசிகலா அறிவித்தார் வரும் சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் தங்கள் அஇபுதமமுக கட்சி போட்டியிடும் என்றும் சசிகலா தெரிவித்தார்.
நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் இன்று (13-03-2026) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழ்நாட்டில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இந்த வழக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினரிடம் விளக்கமளித்தார். பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட இந்த விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவோம் என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள், சென்னையில் இன்று (மார்ச் 13)காலை, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நாகையைச் சேர்ந்த காளியம்மாள், தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் […]







