• March 14, 2026

கோவில்பட்டி  எஸ். எஸ். டி. எம்.        கல்லூரியில்    சர்வதேச ரோட்ராக்ட்        தின விழா                                                                    

 கோவில்பட்டி  எஸ். எஸ். டி. எம்.        கல்லூரியில்    சர்வதேச ரோட்ராக்ட்        தின விழா                                                                    

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் சார்பில் கல்லூரி கூட்டரங்கில்     சர்வதேச ரோட்ராக்ட்                                        தின விழா நடந்தது.           

சர்வதேச ரோட்டரியில் இளைஞர்களின் பங்களிப்பினை ஊக்கப்படுத்திட                                                                         18 வயது முதல் 30 வயது                  வரை உள்ள                                       இளைஞர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்க்கவும், சேவை திட்டங்களில் ஈடுபடுத்தவும், 1968ம் ஆண்டு மார்ச் – 13ம் தேதி அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைகழகத்தில் தொடங்கப்பட்ட ரோட்ராக்ட் கிளப்பின் தொடக்க நாளை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 13ம் தேதி ரோட்ராக்ட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரியில் நடந்த சர்வதேச ரோட்ராக்ட் தின விழாவிற்கு ரோட்ராக்ட் சேர்மன் அருண் தலைமை தாங்கினார்.

கல்லூரி செயலாளர் கண்ணன்,    ரோட்டரிசங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் பழனி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கல்லூரி ரோட்ராக்ட் தலைவர் ஹரிகரசுதன் அனைவரையும் வரவேற்றார்.

சர்வதேச ரோட்ராக்ட் தின சேவை திட்டங்கள் குறித்து ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் பேராசிரியர் அருனேஷ் நோக்கவுரையாற்றினார்.

சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் தங்கமுத்து நாடார், துணைத் தலைவர் ரவீந்திரநாதன் சங்கச் செயலாளர் டாக்டர் ஆறுமுகச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர்.

முன்னதாக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநரும், இதயம் குழுமத்தின் தலைவருமான  முத்து  மறைவையொட்டி அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் தினேஷ்குமார்,திவ்ய ஜோதி, காயத்ரி உட்பட ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

முடிவில் கல்லூரி ரோட்ராக்ட்  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜய கோபாலன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *