வேடநத்தம் மாணவி கொலை: குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி ஆறுதல்

விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் இந்த வழக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினரிடம் விளக்கமளித்தார்.
பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட இந்த விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவோம் என்று தெரிவித்துள்ளார்.








