திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று (மார்ச் 18) கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 4 கட்டங்களாக நடைபெற்ற விரிவான […]
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு மதிமுக எம். பி. துரை வைகோ அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது :- உலகப் புகழ்பெற்றதும், தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருளாகவும், புவியியல் அடையாள (GI) அங்கீகாரம் பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதை தங்களது கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சார்ந்த பதற்ற நிலைமைகளின் காரணமாக, கோவில்பட்டி கடலை […]
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த பெட்டைக்குளத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக இன்று காலையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கார் முழுவதும் தீக்கிரையான நிலையில், காரின் உள்ளே 4 பேர் உடல்கள் எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணிகள் […]
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக கொடுத்த மிரட்டலால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்..இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் ஜெயக்குமார், அழகர் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசனை (26) போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது, அவர் தப்பிச்செல்ல முயன்றதால் கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கடந்த 8-ஆம் தேதி அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்து விட்டதாகவும், அவரை தாக்கிய போலீசார் மீது […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.பி. ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்த ஜனவரி 25ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மார்ச் 15ஆம் தேதி மண்டல பூஜைகள் நிறைவடைந்தன. இக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த விழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இக்கோவிலுக்கு கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் […]
`சாகித்ய அகாடமி’ விருது பெறும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கோவில்பட்டி கல்லூரியில் படித்தவர்
பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய நான்கு தன்னாட்சி அமைப்புகள் இயங்கி வருகிறது. சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுநேற்று (மார்ச் 16) 24 மொழிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது […]
அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் வெளியிட ஊடக கண்காணிப்பு குழுவிடம் முன்சான்றிதழ் பெறவேண்டும்; ஆட்சியர்
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான அனைத்து ஊடகச் செய்திகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே சமயம், தேர்தல் காலத்தில் ஊடகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ‘மாவட்ட ஊடகச் சான்றிதழ் […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். மறுநாள் காலை அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என உறவினர்கள் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 18-ஆம் தேதி (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் , தூத்துக்குடி தெற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய இரு மாவட்டப் பிரிவுகளுக்கான நேர்காணலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம்,, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 […]







