தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணல்; 18 ம் தேதி நடக்கிறது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 18-ஆம் தேதி (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் , தூத்துக்குடி தெற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய இரு மாவட்டப் பிரிவுகளுக்கான நேர்காணலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது.

இந்த மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம்,, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விரும்பி மனு செய்தவர்களுடன் திமுக நேர்காணல் குழுவினர் சந்திக்கிறார்கள்.
தூத்துக்குடியுடன் இணைந்து அன்றைய காலை அமர்வில் திருநெல்வேலி (கிழக்கு, மத்திய, மேற்கு), தென்காசி (வடக்கு, தெற்கு) மற்றும் கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) ஆகிய மாவட்டங்களுளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
முன்னதாக, நேர்காணலின் முதல் நாளான மார்ச் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும். மார்ச் 18-ஆம் தேதி மாலை 4.00 மணி அமர்வில் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.







