• March 16, 2026

கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள்

 கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள்

Oplus_16908288

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைரவிழாக் (60ஆண்டு) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வணிகவியல் துறைகள் சார்பாக “காம் பெஸ்ட் 2026” என்ற தலைப்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்விற்கு, கல்லூரி இயக்குநர்  பா.மகேஷ்குமார் தலைமையுரையாற்றினார். கல்லூரி தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர்  ஆர்.வெங்கடேஷன்  வாழ்த்துரையாற்றினார்.

மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் வினாடிவினா, விளம்பரம் தயாரித்தல், ñஆய்வுகட்டுரை சமர்பித்தல், நிதிசார் கல்வி என்ற தலைப்பில் முக ஓவியம் மற்றும் கோலப்போட்டி, தொழில் முனைவோருக்கான திட்டம் தயாரித்தல் மற்றும் பல்திறன் வளர்ப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

 போட்டிகளில் நடுவர்களாக கலந்து கொண்ட பேராசிரியர்களுக்கு துறைத்தலைவர்  செ.பழனிக்குமார்  மற்றும் ஏ.ரேவதி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினார்கள். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கபட்டது.

கீழ ஈரால், தொன் போஸ்கோ கல்லூரி சேம்பியன் பட்டம் பெற்றது.

விழா தொடக்கத்தில் இளங்கலைவணிகவியல் மாணவி. எம்.குரு சரஸ்வதி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், வணிகவியல் பேராசிரியர். எஸ்.பிரபாகர் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *