• October 22, 2026

Month: February 2026

செய்திகள்

தவெகவுக்கு மகளிரின்  பேராதரவை கண்டு திமுக  அச்சம் ; விஜய்

தமிழ்நாட்டு மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று (13.02.2026) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக  த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது :- “புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி?. இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?. வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் திடீர் மாற்றம் ; மதன் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான்  கடந்த டிசம்பர் மாதக் கடைசியில்  பணியிட மாற்றம்  செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றியவர்.  கடந்த ஜனவரி மாதத்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் பதவி ஏற்ற நாளிலிருந்து தனது பணியை திறம்பட மேற்கொண்டார்.   ஏற்கனவே பல வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து சிறையில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கால அவகாசம்

தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதால் இப்பொருட்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு கீழ்க்கண்டவாறு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது. அதன்படி 1.  Breathing Analyzer – 53 2.  Ahuja AM 22 HSD mega phone PA system – 09  3.  3 mm reflecting tape 50 mm x 50 Meter red

கோவில்பட்டி

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெறக்கோரிகோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் மறியல்

மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர்  பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேர வேலை, 300 பேருக்கு குறைவான தொழிலாளர்கள் பணி செய்யும் நிறுவனங்களை மூடுவதற்கு அரசு ஒப்புதல் வேண்டாம். 50-க்கும் குறைவான தொழிலாளர்களை பணி அமர்த்த லைசன்ஸ் வேண்டாம்‌. 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டிப்பது […]

தூத்துக்குடி

கொலை முயற்சி வழக்கு: கணவன், மனைவி, மகனுக்கு தலா 4 ஆண்டு ஜெயில்

தூத்துக்குடி மாவட்டம்  புதுக்கோட்டை போலீஸ்  எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 68) என்பவரை கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அவரது  சகோதரர் செந்தூர பாண்டி (77), அவரது மனைவி உத்தமி (68) மற்றும் மகன் சுரேஷ் (42) ஆகியோர் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் […]

கோவில்பட்டி

திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்தது ஏன் ? வைகோ விளக்கம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறியதாவது:- ,திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் தமிழக அரசியலில் நுழைய முயல்கிறது. அவற்றை “வேரோடு, வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்” என்பதற்காகவே திமுக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை […]

செய்திகள்

கோவில்பட்டியில் 19 ம் தேதி  மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத்திற்கான கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.2.2026 (வியாழக்கிழமை) அன்று மாலை 3 மணியளவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில்  கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து  கொள்வோர் தங்களது குறைகள் தொடர்பாக மனு அளித்து பயன்பெறுமாறு […]

செய்திகள்

விஜய்யுடன் இருந்த பாவத்துக்கு விமோசனம் தேடுகிறேன்; பி.டி.செல்வகுமார்

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு தி.மு.க.வில் வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேசிடம் வாழ்த்துப் பெற்றார். மேலும் குமரி மாவட்ட தி.மு.க. நிர்வாகி களும், மாநில நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து பி.டி.செல்வகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- தனது ரசிகர்களுக்கு த.வெ.க. தலைவர் […]

செய்திகள்

த.வெ.க. தேர்தல் வியூக அலுவலகத்தை காலி செய்யும்படி புது நெருக்கடி

த.வெ.க. தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதியே திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் குறித்த காலத்தில் வெளிவரவில்லை. இதனால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. தற்போது, ‘ஜனநாயகன்’ திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எப்போது வெளியாகும் என்பதில் தொடர்ந்து ‘சஸ்பென்ஸ்’ நீடித்து வருகிறது. இன்னொரு  பக்கம் […]

கோவில்பட்டி

மாணவர்களுக்கு உணவுப்பொருள் கலப்படம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு பள்ளியில் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, வேதியியல் துறை சார்பாக உணவுப் பொருள் கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு, உணவில் கலப்படம் மற்றும் அதன் தீமைகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள் . செல்லப்பாண்டி,.முத்துராஜா ஆகியோர் விளக்கி பேசினார்கள். நிகழ்ச்சிக்கு கல்லூரி  வேதியியல் […]