கோவில்பட்டியில் 19 ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத்திற்கான கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.2.2026 (வியாழக்கிழமை) அன்று மாலை 3 மணியளவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்வோர் தங்களது குறைகள் தொடர்பாக மனு அளித்து பயன்பெறுமாறு கோவில்பட்டி சார் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.







