முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். மத்திய உள்துறை மந்திரியிடம், தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை தெரிவித்திருக்கிறேன். அதிமுகவில் பிரிந்து கிடக்கிற சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த இயக்கம் சிதறுண்டு போகக்கூடாது.கழக சட்ட விதிகளை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். கழகத்தின் பொதுச்செயலாளரை, அடிப்படை தொண்டர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சட்டவிதி. இந்த […]
தெருநாய் மேலாண்மை கல்லூரி அமைப்பின் அறிவுறுத்தலின்படி கோவில்பட்டி. கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி ஆரோக்கியக்கழகம் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கழகம் இணைந்து ‘தெருநாய்களுக்கான மனிதாபிமான தீர்வுகள்: கருத்தடை, நலன் பேணல் மற்றும் அரசாங்க நடவடிக்கை’ என்னும் தலைப்பு குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் மற்றும் வேதியியல் துறைத்தலைவரும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிமான பா.உமாதேவி ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தாவரவியல் துறை உதவிப்பேராசிரியரும் போதைப்பொருள் தடுப்புக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ரா.லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். சுயநிதிப்பாடப் பிரிவுகளின் இயக்குநரும் தாவரவியல் […]
அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு தனி இடம் உண்டு. சுவைக்கு மட்டுமன்றி ஆரோக்கிய நன்மைகளுக்கும் ஆட்டு இறைச்சி ஏற்றதாகும். விடுமுறை நாட்களில் ஆட்டு இறைச்சி சமைத்து சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சிதான். இதனால் இறைச்சி கடைகளில் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதே போல் முக்கிய பண்டிகை நாட்களில் அதிக எண்ணிக்கையில் ஆடுகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். விலையில் அன்றைய நாட்களில் வியாபாரிகள் உயர்த்தி விடுவார்கள். ஆட்டு இறைச்சி ஒவ்வொரு ஊரிலும் விலை வித்தியாசப்படுகிறது. சில ஊர்களில் ஒரு […]
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பிறகும் […]
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘லட்டு’ உலக பிரசித்தி பெற்றதாகும். லட்டு பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கோவிலில் 2024-ம் ஆண்டு 12 கோடியே 15 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் கூடுதலாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா, வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இருப்பினும் லட்சதீவு-குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]
சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்பட விளம்பரத்திற்கு சிவாஜிகணேசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்துவதா?சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது பராசக்தி – தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952ல் புரட்டிப்போட்ட பராசக்தி திரைப்படத்தின் பெயரை மீண்டும் அதே பெயரில் தயாரிப்பதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். ஆனால், ரசிகர்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்ப்பைப் புறந்தள்ளி மீண்டும் அதே பெயரிலேயே. (பராசக்தி) திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவரவிருக்கிறது. வேதனையிலிருக்கும் எங்களுக்கு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல, நேற்று ஒரு தொலைக்காட்சியில், தீ பரவட்டும் என்று நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்து தீப்பந்தத்தை […]
புத்தாண்டை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறை சார்பில் முதலாம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மகளிர் கபடி போட்டி நடந்தது. நாலுமாவடி ஏலிம் விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தூத்துக்குடி லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, காயல்பட்டினம் ரத்தினா செவன் கிளப் அணி, கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, தூத்துக்குடி கபடி அகடமி, சாத்தான்குளம் பாரத் மாதா அணி, கூட்டுடன்காடு அணி உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. […]
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி, மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை துறைதோறும் பல முன்னோடி திட்டங்களை, எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தீட்டிச் செயல்படுத்தி வருகிறார். நாடுபோற்றும் இத்திட்டங்களை […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டுபிறப்பு ,அன்னைமரியாள் இறைவனின் தாய் ,இயேசு பெயர் சூட்டுதல் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இப் பெருவிழாவில் இரவு 11:45 மணிக்கு அருட்தந்தையர்கள் பங்களாவில் இருந்து அருட்தந்தையர்களை இறைமக்கள் பவனியாக அழைத்து வந்தனர். பின்னர் புத்தாண்டு பிறப்பு பெருவிழா திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டு 12 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க புத்தாண்டு பிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார் உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார், […]







