கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டு பிறப்பு திருப்பலி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டுபிறப்பு ,அன்னைமரியாள் இறைவனின் தாய் ,இயேசு பெயர் சூட்டுதல் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இப் பெருவிழாவில் இரவு 11:45 மணிக்கு அருட்தந்தையர்கள் பங்களாவில் இருந்து அருட்தந்தையர்களை இறைமக்கள் பவனியாக அழைத்து வந்தனர்.
பின்னர் புத்தாண்டு பிறப்பு பெருவிழா திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டு 12 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க புத்தாண்டு பிறப்பு திருப்பலி நடைபெற்றது.

திருப்பலியில் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார் உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார், கருமாத்தூர் குருமாணவர்கள் பொறுப்பாளர் சூசைசெல்வராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.ஆலயத்தில் இறைமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் இறைமக்கள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
1-1-2026 காலை 8 மணிக்கு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்







