கோவில்பட்டியில் ஆட்டு இறைச்சி ஒரு கிலோவுக்கு ரூ.200 அதிகரிப்பு
அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு தனி இடம் உண்டு. சுவைக்கு மட்டுமன்றி ஆரோக்கிய நன்மைகளுக்கும் ஆட்டு இறைச்சி ஏற்றதாகும்.
விடுமுறை நாட்களில் ஆட்டு இறைச்சி சமைத்து சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சிதான். இதனால் இறைச்சி கடைகளில் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.
இதே போல் முக்கிய பண்டிகை நாட்களில் அதிக எண்ணிக்கையில் ஆடுகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். விலையில் அன்றைய நாட்களில் வியாபாரிகள் உயர்த்தி விடுவார்கள்.

ஆட்டு இறைச்சி ஒவ்வொரு ஊரிலும் விலை வித்தியாசப்படுகிறது. சில ஊர்களில் ஒரு கிலோ இறைச்சி 500 ரூபாய் முதலே விற்கப்படுகிறது. கோவில்பட்டியில் ஒரு கிலோ எலும்புக்கறி ரூ.900, தனிக்கறி ரூ.1௦௦௦ என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது.
நேற்று 2025 ஆம் ஆண்டு முடிந்து 2026 ஆம் ஆண்டு பிறந்தது. ஆட்டு இறைச்சி கடைகளில் திடீரென விலை அதிகரித்து இருக்கிறது. தனிக்கறி விலை ரூ.200 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1200 க்கு விற்றது,.இதே போல் எலும்புக்கறி ரூ.900 லிருந்து ரூ.1௦௦௦ ஆனது.
இது பற்றி இறைச்சி கடைக்காரர்கள் கூறுகையில்.” பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு இருக்கும்/. அதன்பிறகு பழைய விலைக்கே ஆட்டு இறைச்சி விற்கப்படும்” என்று தெரிவித்தனர்,.







