தெருநாய்களுக்கான மனிதாபிமான தீர்வுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தெருநாய் மேலாண்மை கல்லூரி அமைப்பின் அறிவுறுத்தலின்படி கோவில்பட்டி. கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி ஆரோக்கியக்கழகம் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கழகம் இணைந்து ‘தெருநாய்களுக்கான மனிதாபிமான தீர்வுகள்: கருத்தடை, நலன் பேணல் மற்றும் அரசாங்க நடவடிக்கை’ என்னும் தலைப்பு குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் மற்றும் வேதியியல் துறைத்தலைவரும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிமான பா.உமாதேவி ஆகியோர் வழிகாட்டுதலின்படி
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தாவரவியல் துறை உதவிப்பேராசிரியரும் போதைப்பொருள் தடுப்புக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ரா.லட்சுமணன் வரவேற்புரையாற்றினார்.

சுயநிதிப்பாடப் பிரிவுகளின் இயக்குநரும் தாவரவியல் துறைத்தலைவருமான பா.மகேஸ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஜமீன் தேவர்குளம், கால்நடை kikkமருத்துவர் டாக்டர் ராகுல் கிருஷ்ணகாந்த் சிறப்புரையாற்றினார். தெருநாய் கடியிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முறை பற்றியும் தெருநாய் கடித்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெருநாய் கடிக்கு அரசு செய்யும் ஏற்பாடுகள் குறித்தும் ரேபிஸ் நோய் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உரையாடினார்.
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 7 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரோக்கியக்கழக ஒருங்கிணைப்பாளரும் விலங்கியல் துறைத்தலைவருமான ச. செல்வகுமார் செய்திருந்தார்.







