மாவட்ட மகளிர் கபடி போட்டி: கோவில்பட்டி அணி கோப்பையை கைப்பற்றியது
புத்தாண்டை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறை சார்பில் முதலாம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மகளிர் கபடி போட்டி நடந்தது.

நாலுமாவடி ஏலிம் விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தூத்துக்குடி லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, காயல்பட்டினம் ரத்தினா செவன் கிளப் அணி, கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, தூத்துக்குடி கபடி அகடமி, சாத்தான்குளம் பாரத் மாதா அணி, கூட்டுடன்காடு அணி உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதி போட்டியில் கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், காயல்பட்டினம். ரத்தினா செவன் கிளப் அணியும் மோதின. இதில் கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 34:20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
காயல்பட்டினம் ரத்தினா செவன் கிளப் அணி 2வது இடத்தை பிடித்தது.

இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் கலந்து கொண்டார்.
தொடர்ந்து முதலிடம் பிடித்த கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம், 2வது இடத்தை பிடித்த காயல்பட்டினம் ரத்தினா செவன் கிளப் அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரம், 3வது இடத்தை பிடித்த தூத்துக்குடி கபடி அகாடமி அணிக்கு பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம், 4வது இடத்தை பிடித்த தூத்துக்குடி லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
. விந்தியா, கற்பகவல்லி, ஜெயலட்சமி, மினரோஷினி ஆகியோருக்கு சிறப்பு ஆட்ட வீராங்கனைகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமையில் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார், போட்டி ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.







