தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் போட்டியிடுவதைவிட என்னுடன் பயணித்தவர்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். முந்தைய ஆட்சியின் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது 125 நாள்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் எந்தவொரு நல்ல திட்டங்களையும் திமுக வரவேற்பதில்லை. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போதையின்போது நிகழ்கின்றன. போதை கலாசாரம் அதிகமாகிவிட்டது. முதல் முறையாக விஜய் […]
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளில் 3 பேருக்கு தலா மூன்று ஆயுள்தண்டனை, ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இது பற்றிய விவரம் வருமாறு:- கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்த கடற்கரையாண்டி மகன் ஆறுமுகராஜா (43/2025). அதே பகுதியைச் சேர்ந்த காசி (42/2025), […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31-ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டுஜூன் 1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது.ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டைகளைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை. இந்த நிலையில், சம […]
கோவில்பட்டி ,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கணினி பயன்பாட்டுத் துறை சார்பாக கல்லூரிகளுக்கான பல்வேறு போட்டிகள் BRIGHT SPARK’25” என்ற தலைப்பில் நடைபெற்றன. கட்டுரை சமர்ப்பித்தல், குறும்படம், காணொளித் தொகுப்பு, மாதிரி ஏலம், வினாடி வினா, வலைத்தள வடிவமைப்பு, மீம் உருவாக்கம் மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து கலைப்படைப்பு என்று போட்டிகள் களை கட்டின. இப்போட்டிகளில் 150க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர்.சுப்புலெட்சுமி மற்றும் கல்லூரி இயக்குனர்.மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் இப்போட்டிகள் நடைபெற்றன. கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் […]
தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, நெல்லை, பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். இந்த ரெயில்கள் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு; *நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், தற்போது இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு […]
நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று(டிசம்பர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் ரெயில்வே பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதமும், முன்பதிவில்லாத சாதாரண […]
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் நிர்வாகிகள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டும் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். எனவே அஜிதா ஆக்னஸ் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு வெளியே கண்ணீருடன் காத்திருந்தார். இந்த நிலையில் புதிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து கூறி நியமன ஆணையை வழங்குவதற்காக விஜய் […]
கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 12ஆம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா முத்தையாமால் தெருவில் நடந்தது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்ட செயலாளர் கவியரசன் தலைமை தாங்கி , உலக அமைதிக்காக ஆயிரம் ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அதிமுக பிரதிநிதி மகேந்திரன், அம்மா பேரவை நகரசெயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வார்டு செயலாளர் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இரவு 11.45 மணிக்கு அருட்தந்தையர்கள் பங்களாவில் இருந்து அருட்தந்தையர்களை கிறிஸ்தவ மக்கள் பவனியாக அழைத்து வந்தனர். பின்னர் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி கொண்டாடப்பட்டது. திருப்பலியில் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்திரு அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார், சேசு சபை அருட்தந்தை மணிவளன், மதுரை ஓ.சி.டி. சபை இன்னாசி அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதேபோல் […]
திருச்செந்தூர் கோவிலில் மூத்த குடிமக்கள் வரிசையில் அத்துமீறல்; பக்தர்கள் விழிப்புணர்வு பெறுவது எப்போது?
முருகப்பெருமானின் இரண்டாம்படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். விழா நாட்களில் திருச்செந்தூருக்கு இந்த எண்ணிக்கை பல மடங்கு உயருகிறது. கோவிலுக்கு வரும் பகதர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் மூத்த குடிமக்களுக்கான(சீனியர் சிட்டிசன்) தனி வரிசை என்பது வரவேற்கத்தக்க […]







