கோவில்பட்டியில் கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள்
கோவில்பட்டி ,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கணினி பயன்பாட்டுத் துறை சார்பாக கல்லூரிகளுக்கான பல்வேறு போட்டிகள் BRIGHT SPARK’25” என்ற தலைப்பில் நடைபெற்றன.
கட்டுரை சமர்ப்பித்தல், குறும்படம், காணொளித் தொகுப்பு, மாதிரி ஏலம், வினாடி வினா, வலைத்தள வடிவமைப்பு, மீம் உருவாக்கம் மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து கலைப்படைப்பு என்று போட்டிகள் களை கட்டின. இப்போட்டிகளில் 150க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர்.சுப்புலெட்சுமி மற்றும் கல்லூரி இயக்குனர்.மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் இப்போட்டிகள் நடைபெற்றன.

கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மீனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரி(VHNSNC) மாணவ மாணவிகள் ஒட்டுமொத்த சாமபியன் பட்டத்துக்கான சுழற் கோப்பையை வென்றனர்.
விழா தொடக்கத்தில் கணினி பயன்பாட்டுத் துறை இளங்கலை மாணவி பானுப்பிரியா வரவேற்று பேசினார் முடிவில் மாணவர் அ.முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் இயக்குனர் ஆகியோர் தலைமையில் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் காந்திமதி வழிகாட்டுதலில் உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.
இயற்பியல் துறை விழா

கல்லூரியி,ன் இயற்பியல் துறை சார்பாக கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி “சரியாக உண்ணுங்கள், புத்திசாலித்தனமாகச் சிந்தியுங்கள்: வாழ்வில் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை உருவாக்குங்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இயற்பியல் துறைத்தலைவர் பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் இரா.கவிதாமஞ்சு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னையை சார்ந்த உணவுப் பாதுகாப்பு பயிற்றுநர் மற்றும் ஆலோசகரான க.ரம்யா ‘ஆரோக்கியமான உணவை உண்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்’ என்ற தலைப்பில் சிறந்த வாழ்க்கைக்கான உணவுப்பழக்கங்களை பின்பற்றுவது குறித்து சிறப்புரையாற்றினார். மூன்றாமாண்டு இயற்பியல் மாணவி செல்வி அக்சயா நன்றி கூறினார்.







