சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அன்னதானம்
கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 12ஆம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா முத்தையாமால் தெருவில் நடந்தது.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்ட செயலாளர் கவியரசன் தலைமை தாங்கி , உலக அமைதிக்காக ஆயிரம் ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அதிமுக பிரதிநிதி மகேந்திரன், அம்மா பேரவை நகரசெயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வார்டு செயலாளர் கிருஷ்ணசாமி, அறக்கட்டளைச் சேர்ந்த நாகராஜ், முருகேசபாண்டியன், மதிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் நேதாஜிபாலமுருகன் செய்திருந்தார்.







