சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர். தொடர்ந்து மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். ஆகஸ்டு 13-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தொடர்ச்சியாக சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தனியார்மயம் இல்லாமல் பழைய நிலைமையிலேயே மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக மீண்டும் பணி வேண்டும், […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தவிர நாள்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து […]
கோவில்பட்டி யூபி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா தொடங்கி வைத்தார்.பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் தலைமை தாங்கினார்..பள்ளி முதல்வர் அமுதவல்லி மற்றும் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.’ மாணவ மாணவிகள் தங்கள் கைகளில் சாலை பாதுகாப்பு குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தி கொண்டு மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை […]
கோவில்பட்டி அருகே கயத்தாறு போலீஸ் எல்லைக்குட்பட்ட அய்யனார்ஊத்து பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் அண்ணாமலை (43/2019) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான உடையார் (76), கோதண்டராமர்(40) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அய்யனார்ஊத்து பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்த் சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து உடையார் மற்றும் கோதண்டராமர் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட […]
கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும். ஐப்பசி மாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் […]
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதற்கிடையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் அதிகமாக பரவி வந்தன. இந்நிலையில், ரஜினிகாந்தின் […]
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- சட்ட விதிகளின்படி வாக்காளர்களுக்கு படிவத்தை பிஎல்ஓ–க்கள்தான் (வாக்குச்சாவடி அலுவலர்) வழங்கவும், திரும்பப் பெறவும் வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் பிஎல்ஓக்களை மிரட்டி, அவர்களே வாக்காளர்களிடம் படிவங்களை வழங்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? அரசியல் கட்சியினர் பிஎல்ஓக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களே படிவங்களை கொடுக்கக் கூடாது. இது மாதிரி நடப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை வரும். கள்ள ஓட்டை […]
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் விஜய் பேசியதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் […]
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், பூத் (பாகம்) கிளை கழகங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விபரங்களை மாவட்ட செயலாளர்களிடம் முழுமையாக கேட்டறிந்து, இப்பணியினை விரைந்து முடிக்குமாறு […]
த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக 2026 தேர்தலில் […]







