கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி யூபி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா தொடங்கி வைத்தார்.பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் தலைமை தாங்கினார்..பள்ளி முதல்வர் அமுதவல்லி மற்றும் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.’

மாணவ மாணவிகள் தங்கள் கைகளில் சாலை பாதுகாப்பு குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தி கொண்டு மக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்களை உரத்த குறலில் எழுப்பியபடி சாலைகளில் பேரணியாக சென்றனர். பழைய பேருந்து நிலையம் எதிரே சுற்றுலா ஆய்வு மாளிகை முன்பு தொடங்கி ரெயில் நிலையம் வரை சென்று பேரணி நிறைவடைந்தது







