கோவில்பட்டி சுந்தரேஸ்வரர், பூவனநாதசுவாமி கோவில்களில் அன்னாபிஷேகம் ; பக்தர்கள் தரிசனம்

கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

ஐப்பசி மாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.அதனால் தான் இந்த நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
ஐப்பசி மாத பவுர்ணமி தினமான இன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அந்த வகையில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில், மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது
அன்னாபிஷேகத்திற்கு பச்சரிசி மற்றும் பழங்கள் மாலை காய்கறி மாலைகள், பழங்கள், காய்கறிகளை பக்தர்கள் பலர் வழங்கினர்.
மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு – விக்னேஷ்வர பூஜை, புன்மாக வாகனம் கும்பபூஜை, ஹோமம் காலை 10 மணிக்கு – பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

காலை 10.25 மணிக்கு – மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு அபிஷக பூஜை பகல் 11.20 மணிக்கு – அன்னாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
மாலை 6.15 மணிக்கு – அன்னாபிஷேக சிறப்பு தீபாராதனை தொடங்கியது. 7.15 மணி வரை அன்ன அலங்காரத்தில் தரிசனம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தில் இருந்து அன்னம் அகற்றப்பட்டது.
இரவு 8 மணிக்கு – விபூதி, பன்னீர், சந்தனம் அபிஷகம் நடைபெற்று கும்பாபிஷகம் நடந்தது. இரவு 8.25 மணிக்கு – அர்த்தஜாம பூஜை தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







