நெல்லை மாவட்டம் பேட்டை குளத்தை சேர்ந்தவர் மாசானம் மகன் ராஜ் (45). இவர் கிராக்கி, விதி எண்-3, உயிர் மூச்சு ஆகிய சினிமா படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாய்ஸ் கோவில்பட்டி அருகே புதியம்புத்தூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ரூபன்ஜான் என்ற மகனும், டைட்டஸ் மேத்திவ் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக தூத்துக்குடி கே.டி.சி.நகரில் குடியிருந்து வருகின்றனர். நடிகர் ராஜ் நேற்று மாலை […]
அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழக அரசின் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட
அயல்நாடுகளுக்கு பணி, கல்வி பயிலச் செல்பவர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் 15 நபர்களைக் கொண்டு கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் அயலகத் தமிழர் நல […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக முதியோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி புதுரோடு முத்தையாமல் தெருவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நேதாஜி மக்கள் நல அறக்கட்டளை தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். கண்ணன், ரத்தினவேல்,மதிமுத்து முன்னிலை வகித்தனர்.நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் மகேந்திரன் முதியோருக்கு புத்தாடை வழங்கினார்.அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணசாமி,சேகர், காமராஜ்,நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு கயத்தார் மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், கயத்தார் நகரச்செயலாளர் கண்ணண், ஒன்றிய செயலாளர் அருண் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன் , கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், கோவில்பட்டி நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை, மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, […]
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்துவருகிறார். இவருக்கு அண்மை காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக கடந்தாண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சென்று 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று இருந்தார். இந்தநிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை […]
கோவில்பட்டியில் மோசமான நிலையில் உள்ள மந்தித்தோப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்களுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இது பற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும், சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குண்டும் குழியுமான சாலையில் வாழை நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மந்தித்தோப்பு சாலை புனித ஓம் பள்ளி அருகில் நடந்த போராட்டத்திற்கு இந்திய […]
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). அவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லக்கண்ணுவை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நல்லகண்ணு […]
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்கில், ரோட்டரி கிளப்பின் ரோட்ராக்ட் அமைப்பு தொடக்கம்
ரோட்ராக்ட் என்பது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான ஒரு சேவை அமைப்பாகும். இது தலைமைத்துவம், தொழில்முறைத் திறன்கள் மற்றும் சமூக சேவைகளை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரோட்டரி அமைப்பின் ஒரு பகுதியாகும், இது சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர இளைஞர்களை ஒன்றிணைக்கிறது. இந்த அமைப்பு தலைமைத்துவம் மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்க்க உதவுகிறது. உள்ளூர் சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த பலவிதமான சேவைத் திட்டங்களை மேற்கொள்கிறது. உறுப்பினர்கள் புதிய நண்பர்களை உருவாக்கவும், பல்வேறு […]
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் சூர்யா.(வயது 22) இவர் பேக்கரியில் மாஸ்டராகவும், சில நேரம் மீன்பிடித் தொழிலுக்கும் சென்று வந்தார்.. கடந்த 13ஆம் தேதி மாலை இவரது நண்பர்கள் 4 பேர் இரண்டு பைக்குகளில் வந்து சூர்யாவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு சூர்யா வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி – ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளபட்டி அருகே காட்டுப்பகுதியில் சூர்யா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றிய தகவல் பேரில் சம்பவ […]







