வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு கயத்தார் மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், கயத்தார் நகரச்செயலாளர் கண்ணண், ஒன்றிய செயலாளர் அருண் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன் , கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், கோவில்பட்டி நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை, மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, துணைச்செயலாளர் சந்தனமாரி அருணாசலபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்







