முதியோர்களுக்கு தீபாவளி புத்தாடை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக முதியோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி புதுரோடு முத்தையாமல் தெருவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நேதாஜி மக்கள் நல அறக்கட்டளை தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். கண்ணன், ரத்தினவேல்,மதிமுத்து முன்னிலை வகித்தனர்.நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் மகேந்திரன் முதியோருக்கு புத்தாடை வழங்கினார்.அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணசாமி,சேகர், காமராஜ்,நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்







