கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்கில், ரோட்டரி கிளப்பின் ரோட்ராக்ட் அமைப்பு தொடக்கம்
ரோட்ராக்ட் என்பது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான ஒரு சேவை அமைப்பாகும்.
இது தலைமைத்துவம், தொழில்முறைத் திறன்கள் மற்றும் சமூக சேவைகளை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ரோட்டரி அமைப்பின் ஒரு பகுதியாகும், இது சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர இளைஞர்களை ஒன்றிணைக்கிறது.

இந்த அமைப்பு தலைமைத்துவம் மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்க்க உதவுகிறது.
உள்ளூர் சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த பலவிதமான சேவைத் திட்டங்களை மேற்கொள்கிறது.
உறுப்பினர்கள் புதிய நண்பர்களை உருவாக்கவும், பல்வேறு சமூக மற்றும் தொழில்முறை நிகழ்வுகளில் ஈடுபடவும் வாய்ப்பு கிடைக்கும்.
அதன்படி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்கில், ரோட்டரி கிளப்பின் ரோட்ராக்ட் அமைப்பு தொடக்கம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் எஸ். ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ரவி மாணிக்கம், ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்ராக்ட் சேர்மன் அருண் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி உறுப்பினர்கள் பூல்பாண்டி, கண்ணன், கருப்பசாமி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள்,
ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.







