விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ் (வயது 36). 2011ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தார்.இவருக்கும், சிவகாசியை சேர்ந்த மகாலட்சுமிக்கும் 2016 இல் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகாலட்சுமி குழந்தைகளுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே சொத்து விவகாரத்தில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.. இதனிடையே, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி தனது […]
கோவில்பட்டி பகடா ஸ்போர்ட்ல் சார்பில் கோவில்பட்டி சிட்டி சிரிக்கெட் லீக் மற்றும் பகடா பிக்பாஸ் 20 ஓவர் சிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 மாதங்களாக கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நடைபெற்ற கோவில்பட்டி சிட்டி கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டியில் பவர்ஸ்டார் அணி முதலிடத்தையும், கோவில்பட்டி லயன்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. நேற்று நடைபெற்ற கோவில்பட்டி பகடாபிக்பாஸ் 20 ஓவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பவர்ஸ்டார் மற்றும் எஸ்..டி.ஆர். […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் மகாத்மா காந்தி ரத்ததான கழகம் இணைந்து ரத்ததானம் வழங்குவதன் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் எஸ். ராஜ்குமார், ரோட்டரி சேர்மன் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். ரத்ததான கழக தலைவர் தாஸ் முன்னிலையில் வைத்தார். மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. ஆட்டோ பேரணியை உதவி ஆய்வாளர் துவங்கி வைத்தார். ரோட்டரி கிளப் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். பேரணியில் பள்ளி […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவினால் தொடங்கி வைக்கப்பட்டது என்ற பெருமை கொண்டது. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டு […]
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்கள் மாநில ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நாளை 3.10.2025 முதல் 7.10.2025 வரை கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன .நாளை காலை நடைபெறும் தொடக்க விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைக்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜு மற்றும் சென்னை மண்டல முதுநிலை […]
காந்தி ஜெயந்திஇன்று கொண்டாடப்பட்டது,இதையோட்ட்டி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள காந்தி உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. காந்தியடிகளின் வாழ்க்கையும், கொள்கைகளுமான அகிம்சை, உண்மை, சமூகநீதி போன்ற தத்துவங்களை போற்றுவோம். மது மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக போராடுவோம், மூடநம்பிக்கைகளை எதிர்த்து அறிவியல் பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம், அமைதி மற்றும் வன்முறை அற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், […]
புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்கும் மசோதா நிறைவேறவில்லை: அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதாவில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 பேர் வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இதற்கு ஜனநாயக கட்சி தலைமை சில நிபந்தனைகளை […]
விஜய்க்கு வருவது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்; செந்தில் பாலாஜி பரபரப்பு
கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மிக கொடுமையானது, யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம்.கரூரில் […]
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் குர்ரே. இவருடைய மனைவி சிமாதேவி (வயது 35). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜெகதீஸ் குர்ரே, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் தங்கி கடந்த 1½ மாதமாக தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சிமாதேவியும் அதே எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே சிமாதேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். பல இடங்களில் தேடி […]
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்பினார். டெல் அவிவ் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த நெதன்யாகு, ‘பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்’ என ஆவேசமாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், போர் நிறுத்தத்திற்கான டிரம்ப்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்ச திட்டத்திற்கு மட்டுமே ஒப்புதல் […]







