கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தி புகழஞ்சலி-உறுதிமொழி ஏற்பு
காந்தி ஜெயந்திஇன்று கொண்டாடப்பட்டது,இதையோட்ட்டி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள காந்தி உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
காந்தியடிகளின் வாழ்க்கையும், கொள்கைகளுமான அகிம்சை, உண்மை, சமூகநீதி போன்ற தத்துவங்களை போற்றுவோம். மது மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக போராடுவோம், மூடநம்பிக்கைகளை எதிர்த்து அறிவியல் பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம், அமைதி மற்றும் வன்முறை அற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், ஞானம், இந்திய கலாச்சார நட்புறவு கழக வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிருஸ்டோபர், INTUC ராஜசேகரன், மகேந்திரன், பழனிச்சாமி, முருகன், காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நீதி மய்யம் ரமேஷ், ராதாகிருஷ்ணன், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், பகத்சிங் இரத்ததானக்கழகம் காளிதாஸ், லட்சுமணன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வக்குமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் காமராஜர் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,.
உலகத்திருக்குறள் கூட்டமைப்பு
கோவில்பட்டியில் உலகத்திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் கருத்தப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட துணைத்தலைவர் துரைப்பாண்டி,மாவட்ட செயலாளர் செல்லத்துரை(எ)செல்வம், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

கோவில்பட்டியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் நாட்டுநலப்பணி திட்ட முன்னாள் அலுவலர் சுப்பா ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.







