முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்கள் ஆக்கி போட்டி; கோவில்பட்டியில் நாளைதொடங்குகிறது
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்கள் மாநில ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நாளை 3.10.2025 முதல் 7.10.2025 வரை கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன .நாளை காலை நடைபெறும் தொடக்க விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைக்கிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜு மற்றும் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் ராஜா ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்
.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி ராஜ், கோவில்பட்டி விளையாட்டு விடுதி மேலாளர் ரத்தினராஜ் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இப் போட்டியில் 684 வீரர்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள் போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடைபெறும் வீரர்களுக்கு தங்கும் இடம் உணவு போக்குவரத்து அனைத்தும் அரசு செலவில் இலவசமாக செய்து தரப்பட உள்ளது.







