கோவில்பட்டியில் ரத்ததானம் விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் மகாத்மா காந்தி ரத்ததான கழகம் இணைந்து ரத்ததானம் வழங்குவதன் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் எஸ். ராஜ்குமார், ரோட்டரி சேர்மன் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். ரத்ததான கழக தலைவர் தாஸ் முன்னிலையில் வைத்தார்.
மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. ஆட்டோ பேரணியை உதவி ஆய்வாளர் துவங்கி வைத்தார். ரோட்டரி கிளப் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

பேரணியில் பள்ளி சிலம்பாட்ட மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்ட காங்கிரஸ் மூத்த பொறுப்பாளர் பிரேம்குமார், ராஜசேகர் சுரேஷ்குமார், இந்திய பசுமை இயக்கம் குமார், ரத்ததான கழக உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. பேரணி பாரத ஸ்டேட் வங்கி முன்பு இருந்து காந்தி மண்டபம் வரை சென்று மகாத்மா காந்தி திருவுருச்சிலைக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது,
தொடக்கத்தில் ரோட்டரி கிளப் செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்,.
மரக்கன்று நடுதல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி கிளப் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார், சேர்மன் வெங்கடேஷ் முன்னிலை வைத்தார், செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார்,
கோவில்பட்டி மெயின் ரோட்டில் இரு புறமும் 10 க்கும் கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன, =







