கோவில்பட்டியில் கிரிக்கெட் போட்டி: பவர்ஸ்டார் அணி வெற்றி
கோவில்பட்டி பகடா ஸ்போர்ட்ல் சார்பில் கோவில்பட்டி சிட்டி சிரிக்கெட் லீக் மற்றும் பகடா பிக்பாஸ் 20 ஓவர் சிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 மாதங்களாக கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற கோவில்பட்டி சிட்டி கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டியில் பவர்ஸ்டார் அணி முதலிடத்தையும், கோவில்பட்டி லயன்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

நேற்று நடைபெற்ற கோவில்பட்டி பகடாபிக்பாஸ் 20 ஓவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பவர்ஸ்டார் மற்றும் எஸ்..டி.ஆர். அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த எஸ்..டி.ஆர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய கோவில்பட்டி பவர்ஸ்டார் அணியினர் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பபிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
. 72 ரன்கள் எடுத்த தங்க பிரவின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் . ஆல்பர்ட் முரளிதரன் தலைமை தாங்கினார்.. செயலாளர் .கிறிஸ்பின், பொருளாளர் கணேஷ், உறுப்பினர் செந்தில்நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் டாக்டர் மகிழ்ஜீவன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி பகடா ஸ்போர்ட்ல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.







