நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக கூறி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி என்.செந்தில்குமார் நேற்று விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.முருகவேல், ‘மனுதாரர் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக மனுதாரரை வழக்கில் சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக மனுதாரர் மீது வழக்குப்பதிவு […]
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு முன்பதிவில்லாத அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 06014 நெல்லையில் இருந்து நாளை .5ம் தேதி மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து 11-உட்காரும் சேர் கார் பெட்டிகள், 4-பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2-பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என மொத்தம் […]
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கான மாநில ஆக்கி போட்டி கோவில்பட்டியில் இன்று தொடங்கியது.. இப்போட்டிகள் அக்.7-ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.கோவில்பட்டி கிருஷ்ணாநகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் இன்று மாலை நடந்த தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் சார் ஆட்சியர் ஹூமன்சூ மங்கள், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, […]
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்? விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக – […]
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தம்: மதிமுக தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி
தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஆர் எஸ் ரமேஷ்,வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகராக வளர்ந்து வரும் கோவில்பட்டி நகரில் கடந்தாண்டு விடப்பட்ட வந்தே பாரத் ரெயில், (நெல்லை- சென்னை) நின்று செல்ல வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பல்லாயிரவர் பங்கேற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை 25.9.2024அன்று நடத்தியது. அதில் துரை வைகோ எம்பி பங்கேற்று கோவில்பட்டியில் ரெயில் நிலையத்தில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அதற்கு முன்னதாக, மதிமுக […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கியது. அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது நீதிபதிகள் அரசு தரப்பிடமும், தவெகவிடமும் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு;“மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? விஜய் […]
தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகே உள்ள வடக்கு செவல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரா மகன் பெத்துராஜ் (வயது 23), காலனி தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ரமேஷ் (18), மேலத் தெருவைச் சேர்ந்தவர் வேல்வாசகம் மகன் மாரி லிங்கம் (19), இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று இரவு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேம்பாரில் உள்ள கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தை பார்ப்பதற்காக வடக்கு செவல் […]
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கோவில்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தவெகவினர் கிழக்கு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தவெக பொறுப்பாளர் சுமங்கலி ராஜா தலைமையில் நிர்வாகிகள் கிழக்கு காவல் நிலையத்தில் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-‘ கடந்த மாதம் 27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் நடந்த “மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் இறப்பின் உண்மை நிலையை கண்டறிய, […]
சென்னையில் முதலமைச்சர் வீடு. கவர்னர் மாளிகை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்;
சென்னையில் வசித்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் […]
சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-‘ , திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை எளிதாக்கும் வகையில் நாளை (சனிக்கிழமை) குறிப்பிட்ட ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில்-கோவை (வண்டி எண்.16321) எக்ஸ்பிரஸ் நாளை நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர்-கரூர் இடையே மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இதனால் அந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் […]







