கோவில்பட்டியில் முதல்வர் கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி தொடக்கம்

முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கான மாநில ஆக்கி போட்டி கோவில்பட்டியில் இன்று தொடங்கியது.. இப்போட்டிகள் அக்.7-ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 38 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் இன்று மாலை நடந்த தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

விழாவில் சார் ஆட்சியர் ஹூமன்சூ மங்கள், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, அர்ஜுனா விருது பெற்ற வீரரும் ஒலிம்பியனுமான எஸ். முகமது ரியாஸ், திமுக பொதுக்குழு உறுப்பினர் பீட்டர் ,ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன், கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கிழக்கு நகர செயலாளர் சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் மாதேஸ்வரன்,குருராஜ், சிறுபான்மையினர் பிரிவு அமலி பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு பழனிக்குமார், ஒன்றிய இளைஞரணி உத்ரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதல் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அணியும், விழுப்புரம் மாவட்ட அணியும் மோதின. இதில், 3 – 0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை புதுக்கோட்டை மாவட்ட அணி 7 – 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதே போல் திண்டுக்கல் மாவட்ட அணியை சேலம் மாவட்டம் அணி 5 – 0 என்ற கோல் கணக்கிலும், திருப்பத்தூர் மாவட்ட அணியை கோயம்புத்தூர் மாவட்ட அணி 9 – 0 என்ற கோல் கணக்கிலும், சென்னை மாவட்ட அணியை ஈரோடு மாவட்ட அணி 3 – 1 என்ற கோல் கணக்கிலும், திருப்பூர் மாவட்ட அணியை தஞ்சாவூர் மாவட்ட அணி 5 – 0 இன்று கோல் கணக்கிலும், பெரம்பலூர் மாவட்ட அணியை ராமநாதபுரம் மாவட்ட அணி 4 – 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன.

நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் அக்.7-ம் தேதி இறுதி போட்டிகள் நடக்கின்றன. வெற்றி பெறும் அணியின் வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் ராஜா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி ராஜ், கோவில்பட்டி விளையாட்டு விடுதி மேலாளர் ரத்தினராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.







