சிபிஐ விசாரணை வேண்டும்: கோவில்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனு
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கோவில்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தவெகவினர் கிழக்கு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தவெக பொறுப்பாளர் சுமங்கலி ராஜா தலைமையில் நிர்வாகிகள் கிழக்கு காவல் நிலையத்தில் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-‘
கடந்த மாதம் 27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் நடந்த “மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் இறப்பின் உண்மை நிலையை கண்டறிய, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இதனை வலியுறுத்தும் விதமாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தவெக சார்பில் அக்டோபர் .5-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன்பு அடையாள உண்ணாவிரதம் நடத்த இருப்பதால், அதற்குரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.







