கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தம்: மதிமுக தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி -மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ்
தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஆர் எஸ் ரமேஷ்,வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகராக வளர்ந்து வரும் கோவில்பட்டி நகரில் கடந்தாண்டு விடப்பட்ட வந்தே பாரத் ரெயில், (நெல்லை- சென்னை) நின்று செல்ல வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பல்லாயிரவர் பங்கேற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை 25.9.2024அன்று நடத்தியது.
அதில் துரை வைகோ எம்பி பங்கேற்று கோவில்பட்டியில் ரெயில் நிலையத்தில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அதற்கு முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்திய ரெயில்வே துறை அமைச்சரை 21 9 2024 அன்று நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து கோவில்பட்டியில் ரெயில் நிறுத்தம் வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

அதை அடுத்து திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி, இந்திய ரெயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து 18.8 2025 அன்று வலியுறுத்தி கூறினார்.
அவ்வப்போது பல்வேறு ரெயில்வே துறை அதிகாரிகளை சந்திக்க நேர்ந்த போதும் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல அறிவுறுத்தி வந்தார்.
தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் (நெல்லை -சென்னை) கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று அறிவிப்பை ரெயில்வே துறை வெளியிட்டுள்ளது.
இக்கோரிக்காக தொடர் முயற்சி மேற்கொண்ட தலைவர் வைகோ,, இளைய தலைவர் துரை வைகோ எம்பி ஆகியோருக்கும் , கோவில்பட்டி உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களின் கோரிக்கையை செவிமடுத்த இந்திய ரெயில்வே துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களுக்கான மறுமலர்ச்சி திமுகவினுடைய போராட்டமும், பணிகளும் எப்போதும் போல் வீரியத்துடன் தொடரும்
இவ்வாறு ஆர்.எஸ்.ரமேஷ் கூறி உள்ளார்.







