காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே, இந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ’கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இந்த இருமல் மருந்தை சாப்பிட்டு மத்தியபிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இருமல் மருந்தில் குழந்தைகளின் சிறுநீரகத்திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது […]
கோவில்பட்டி வக்கீல்கள் சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் கோவில்பட்டி வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு வக்கீல்கள் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நடுவர்கள் சுந்தர், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி மாரிக்காளை கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து […]
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கலைப் போட்டி “COGNITO’25” எனும் தலைப்பில் நடைபெற்றது. இப்போட்டியில் வினாடி -வினா, மெகந்தி, ரங்கோலி, ஆய்வுக் கட்டுரை, பிழை திருத்தம் , நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை அமைக்காமல் நிதியை சுருட்டிய திமுக அரசு; நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.63 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி-தாப்பாத்தி இடையில் சாலை அமைக்காமல், ஜூலை மாதத்திலேயே சாலை அமைத்துவிட்டதாக விளம்பரப் பலகையை மட்டும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறது விளம்பர மாடல் அரசு. சாலையின்றித் தவிக்கும் கிராம மக்களுக்கு வரப்பிரசாதமாக மத்திய அரசு வழங்கிய திட்டத்தை செயல்படுத்தாமல், மக்களை வதைத்துவிட்டு, வழங்கிய நிதியை மட்டும் வாரி சுருட்டிக்கொள்வது தான் திராவிட மாடலா? மக்கள் […]
சென்னை எழும்பூா் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரெயில் கடந்த 2023 ம் ஆண்டு செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரெயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரெயில் கோவில்பட்டியில் நிற்காமல் சென்று வந்தது கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களை சேர்ந்தவர்களுக்கு பெரும் குறையாக இருந்து […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 10.10.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து […]
கோவில்பட்டி அருகே குருவிகுளம் ஒன்றியம் அப்பனேரி ஊராட்சி மன்றம் புதுஅப்பனேரியில் மக்கள் குறை தீர்க்கும் “உங்களுடன் ஸ்டாலின்”முகாம்.நடைபெற்றது. அப்பனேரி மற்றும் புளியங்குளம் ஊராட்சி மன்றங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. இம்முகாமில் 598 மனுக்கள் பெறப்பட்டன. இம் முகாமில் குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் .விஜயலட்சுமி கனகராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன்,கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி து.ரா.வெள்ளைப் பாண்டி, அப்பனேரி ஊராட்சி மன்ற தலைவர் சா.சுரேஷ் புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் .ஜெ.சங்கரேஸ்வரி ஜெயக்குமார், 8வது […]
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டியில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது, 5-வது நாளான இன்று நடந்த முதல் போட்டியில் மதுரை மாவட்ட அணியும், திருச்சி மாவட்ட அணியும் மோதின. இதில், 6 – 0 என்ற கோல் கணக்கில் திருச்சி மாவட்ட அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியுடன், ராமநாதபுரம் மாவட்ட அணி மோதியது. இதில், 1 – 1 என்ற கோல் கணக்கில் இரு […]
மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் தற்போது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் ‘நோயாளிகள்’ என அல்லாமல் ‘மருத்துவப் பயனாளிகள்’ என குறிப்பிடப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக உள்ளதால், […]
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பெற்ற டாக்டர் ராமதாசை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி […]







