கோவில்பட்டி கல்லூரியில் கலைப் போட்டி; மாணவ, மாணவிகள் அசத்தல்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கலைப் போட்டி “COGNITO’25” எனும் தலைப்பில் நடைபெற்றது.
இப்போட்டியில் வினாடி -வினா, மெகந்தி, ரங்கோலி, ஆய்வுக் கட்டுரை, பிழை திருத்தம் , நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி போட்டிகள் மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்துள்ளதாக கூறினார்.
மாணவர்கள் கலைப் போட்டியின் இறுதியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. சாத்தூர் எஸ்ஆர்என்எம் கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்தது.

சிறப்பு விருந்தினராக தென்காசி நல்லமணி யாதவ் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ராமர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் சரண்யா, இணை ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், முத்துராஜா, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருணா தீப சுந்தரி, நிகழ்வின் செயலர் லாவண்யா, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.







