வக்கீல், கோர்ட்டு ஊழியர்களுக்கான கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி வக்கீல்கள் சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் கோவில்பட்டி வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
முகாமிற்கு வக்கீல்கள் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நடுவர்கள் சுந்தர், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி மாரிக்காளை கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில், வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர்
வக்கீல்கள் பாப்புராஜ், சந்தானம், ரவிசங்கர், ராதாகிருஷ்ணன், ஆழ்வார்சாமி சிவக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.







