இனிப்பான செய்தி: கோவில்பட்டியில் நாளை முதல் `வந்தே பாரத் ‘ரெயில் 2 நிமிடம் நின்று செல்லும்
சென்னை எழும்பூா் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரெயில் கடந்த 2023 ம் ஆண்டு செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரெயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

ஆனால் இந்த ரெயில் கோவில்பட்டியில் நிற்காமல் சென்று வந்தது கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களை சேர்ந்தவர்களுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. இதனால் இந்த ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. முக்கிய தொழில் நகரமாக விளங்கும் கோவில்பட்டியில் இருந்து நிறைய மக்கள் சென்னை செல்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரெயில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்து இருந்தது. தேதி விவரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. ‘
இந்த நிலையில் இந்தநிலையில், திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரெயில் நாளை 9.10.2025 முதல் . கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து .காலை 6.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில்(20666) 6.38 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வரும். 2 நிமிடத்துக்கு பிறகு 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் (20665) இரவு 9.23 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து , 9.25 மணிக்கு திருநெல்வேலி புறப்பட்டு செல்லும்.







