கோவில்பட்டி கிளை விவேகானந்த கேந்திரம் சார்பாக 2025 S.S.துரைச்சாமி நாடார் கலை அறிவியல் கல்லூரியில் உலக சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை தாங்கினார். , கல்லூரி தமிழ் துறைத் தலைவர் செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.விவேகானந்த கேந்திரம் கோவில்பட்டி கிளை பொறுப்பாளர் பரமகுரு உலக சகோதரத்துவ தினம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து மாணவர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்.சி. குரூப 2 முதல்நிலை தேர்வுக்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி 3 மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. முதல் இரண்டு மாதிரி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. மூன்றாவது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (20.9.2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் […]
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்த 10 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 72 மனுதாரர்கள் என மொத்தம் 82 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு […]
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி 100 பயங்கரவாதிகளை கொன்றது. இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை ட்ரோன் மூலம் தாக்கியது. இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தான் விமானப்படைத் தளங்களை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதன்பிறகு […]
மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார், இவரது மகன் வைரமுத்து(வயது 26). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். தனது கிராமத்தை அவர் நெருங்கியபோது வைரமுத்துவை வழி மறித்த சிலர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில், கொலையான வைரமுத்து அதே […]
டெல்லி சென்ற அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இரவு விருந்தும் அமித்ஷாவின் இல்லத்திலேயே பரிமாறப்பட்டது. எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்தும், அமித்ஷாவை சந்தித்தது குறித்தும், அதுவும் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது, முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டுவந்தார் என்றும் தமிழக அரசியலில் பரபரப்பாக […]
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும், பெண் விடுதலைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடிய தந்தை பெரியார் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தந்தை பெரியார் சிலை முன்பு சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், ஞானம், இந்திய கலாச்சார நட்புறவு கழக […]
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் நாளை (17.9.2025) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் […]
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சக்தி மகேசுவரி (வயது 38). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சக்தி மகேஸ்வரி தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்போது இவரது உறவினரான தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு ஒருவருடன் பழக்கம் […]
மதுரை பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழிலதிபரான இவர், முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த […]







